தலை மகனாய் பிறந்ததால்
தந்தைக்கு பின் தந்தையானான்
தம்பிக்கு தோள் கொடுக்கும் தோழனாய்
தங்கை பாசம் காட்டும்
அண்ணனாய் பாங்காய் வாழ்பவன்.
அம்மாவிற்கு அருந்தவ புதலவனாகி அவளின் குடும்ப விளக்கை
ஏற்ற எரிப்பொருளாய்
என்றும் இருப்பவன்.
குடும்ப நலம் காக்க
அயல்தேச போய் காசு பணம் சேர்தாலும்
குடும்பத்தினர் மேல் பாசங்காட்ட தாய்க்கு அடுத்த ஸ்தானத்தில் நிற்கிறாய்.
இல்லாமையால் ஊரார் இழிவாக பார்த்த போது
இந்த இன்னல் தொடைக்க
இருப்புகொள்ளாது இயந்திரமாய் உழைப்பவன்.
அண்ணன் என்பவன் அன்பாவன் அடுத்தவர்கள் போல்
தம் குடும்பம் சிறக்க அயராது உழைப்பவன்.
அவன் பெருமை கூற கூற அகமும் ஆனந்தத்தில் அலுப்பு கொள்ளாது.
– திண்டிவனம் ஹுசைன்