விலைபோகாத எழுத்துக்கள்

” ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன் இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன் இறைவனிடம் கையேந்துங்கள்”

என்ற நாகூர் ஹனிபாவின் குரல் ஹைபிச்சில் பழைய காலத்து panasonic மாடல் டேப்ரிக்காடரில் பாடிக்கொண்டிருந்தது.

ஹமீது பாடலை கேட்டுக் கொண்டே மனைவி காலையில் செய்த உப்புமாவை கொஞ்ச கொஞ்சமாக எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.,

என்னங்க..” காலையில அண்ணன் துபாயிலேர்ந்து போன் பன்னிச்சு..! ரெண்டு வாரத்துக்கு லீவுல நாளைக்கு வருதாம்..!

அப்படியா..? ஹமீதிடம் வேறு ஏதும் முகத்தில் சலனம் இல்லை.

புள்ளைங்க.. ரெடியாயிடிச்சா..? அனுப்பு, ஸ்கூல்ல விட்டுட்டு பஷீர போய் ஒரு எட்டு பாத்துட்டு வரேன்..!

தனது இரண்டு குழந்தைகளையும் பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு பஷீரின் வீட்டுக்கு செல்கிறான்..!

டேய் வாடா எழுத்தாளர..!

என்னாச்சி.? உன்னுடைய கனவு புத்தகத்தை எழுதி முடிச்சிட்டியா..??

ஆ..! அதெல்லாம் எழுத்திட்டேன்..

அப்பறம் என்னடா ஏதோ பெரிய நாளிதழுக்குத் தொடரா கொடுக்கப்போரதா சொல்லி இருந்த..? அந்த நாளிதழுக்கு பேசினியா..!

ம் ” போன வாரம் பேசுனேன்..!

அப்படியா..!

சரி என்ன சொன்னாங்க.,!

டேய் மச்சான் உன்னுடைய பேறு போட்டு அந்த கட்டுரை வருமாடா? ஆர்வமாக ஹமீதின் கைகளை பற்றிக்கொண்டு கேட்டான்..!

இல்லடா..

அவனுங்க கட்டுரை மொத்தமும் அனுப்ப சொன்னாங்க.,

அப்பறம்..?

ரெண்டு நாள் கழிச்சி போன் வந்திச்சி..!

உங்கள் கட்டுரை எழுத்து நடை எல்லா நல்லாத்தான் இருக்கு..!

ஆனா..? சொல்லுங்க சார்

இந்த concept லாம் இப்ப எடுபடாதுப்பா..

இந்த காலம் பரபரப்பானது

பத்திரிகை நடத்துறது சாதரான விசயமில்ல..

நீ ஒன்னு செய் நாங்க சொல்ற

விசயத்தை மட்டும் எழுதி கட்டுரையா அனுப்பு..

உங்க ஆளுங்க கூட எழுதுறாங்க படிக்கிறீங்களா ன்னு கேக்குரான்டா..?

“டேய் என்ன ஒரு அக்ரிமன்ட் போடாத அடிமை எழுத்தாளனா

எழுதச் சொல்வானுங்க..!

அதுக்காடா..! கஸ்டப்பட்டு ஒக்காந்து அஞ்சி வருசமா எழுத்திட்டிருந்தேன்” ஹமீது குரல் உடைந்து கொண்டிருந்தது.

“சரிடா அந்த பிரபலமான புத்தக பதிப்பகத்துக்காவது அனுப்பலாம்ல..?

அதுவும் செஞ்சே..!

அவங்களும் பதில் அனுப்பி இருந்தாங்க..!

என்னான்னு..!

எழுத்தாளர் ஹமீது அவர்களுக்கு வணக்கம். தங்களுடைய படைப்பை வாசித்தோம். மகிழ்ச்சி தற்போதைய சந்தை சூழளால் இந்த புத்தகத்தை வெளியிட எங்களால் இயலாது.

தாங்கள் விரும்பினால் இஸ்லாமிய அரசியல் குறித்து அல்லாமல் பொதுவான தலைப்பில் எழுதுங்கள் நாங்கள் வெளியிடுகிறோம்.

நன்றி, என்று எழுதப்பட்டிருந்த காகிதத்தை பஷீரிடம் காட்டினான்.!

அந்தாளு எழுதிருக்கருது சரிதாண்டா..!

நம்மாளுங்க நம்ம KJ மாதிரி மார்க்க அறிஞர்கள் எழுதுன புத்தகம்னா வாங்கி மாஞ்சி மாஞ்சி படிக்கிறாங்க..!. பொதுவுல இஸ்லாமிய எழுத்தாளர்னா அந்தப்பக்கம் வாங்க இந்த புத்தகத்தை யோசிப்பான்.!,

சரி லோக்கல் பத்திரிக்கையிலாவது கொஞ்ச கொஞ்சமாக போடாலான்னா பார்த்தா.,! லோக்கல்ல எப்பவும் பெரிய அரசியல் நடக்கும் ஒருத்தன் இன்னொருத்தன் வளர்த்து விடக்கூடாதுன்னு அல்லாஹ் மேல சத்தியம் செஞ்சிக்கிறான்..!

அப்பறம் எப்டிடா அவன் புத்தகம் போடுவான் என்று பஷீர் விரக்தியோடு சொல்ல..!!

டேய் நீ மனச தளர விடாத நீ எழுதுன வரைக்கும் நான் வாசிச்சதுல இந்த புத்தகம் வெளியான நம்ம சமூகத்துல மிகப்பெரிய அரசியல் புரட்சியை வரும்” அரசியல்ங்றது தனி மனிதர்களுடைய

வேலை மட்டுமல்ல ஒட்டு மொத்த சமூகத்தின் கடமைன்னு உணர்த்திக்ற்க்க பாரு நிச்சியமா இந்த புத்தகம் உன் பேர இந்த சமூகத்தில் பேச வைக்குண்டா ..!!

சும்மா இரிடா நீ வேற எதாவது உசுப்பேத்துற..

டேய் இறைவன் தனக்கு பிடிச்சமானவர்கள்ட்ட தாண்டா வேலை வாங்குவாறு..!

அதல்லா சரிதான் அப்படியே எனக்கு கைநிறைய அவரு எதாவது கொடுக்கலாம்ல.!

கொடுத்தா உனக்கு யோசனை வராதே..!

அவருக்கு தெரியாததா..!

நம்மல மாதிரி ஏழைகளுக்கெல்லாம் ஏண்டா இந்த எழுத்து புத்தகம் ங்கற” சிந்தனலாம் வறுது சமுதாயத்துல எத்தனையோ பணக்காரங்க இருக்காங்க அங்க வரலாம்ல”.!!

டேய் மாப்ள..! “அவங்களுக்கு சமுதாயத்த பத்தி யோசிக்றத விட” பத்து லட்சம் முதலீடு பண்ணா எவ்வளவு லாபம் எடுக்கலான்னு கணக்கு போடாத்தாண்டா நேரம் இருக்கும்.

சரி கொஞ்சம் இரு வீட்டிற்கு உள்ளே சென்று ஒரு இரண்டாயிரம் ரூபாய் எடுத்துவந்து ஹமீதின் பாக்கெட்டில் வைத்து திணித்தான்.. டேய் வேனான்டா..!

டேய்” மூலதனம் எழுதுன மார்க்ஸ்சோட வரலாற ஏஞ்சல்சல்சோட பேறு இல்லாம எழுத முடியாதுல்ல..! அப்படித்தான், உன் வரலாற்றிலும் என் பேரும் இல்லாம போயிட கூடாது எனச் சிரித்துக்கொண்டே சொல்ல”

பஷீர் தன் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்லக் கிளம்பினான்.

“மறுதினம் பஷீர் தன்னுடைய முப்பது கட்டுரைகளையும் பாதுகாக்க ஒரு புத்தக வடிவில் அட்டைப்போட்டுக் கொண்டிருந்தான்” வெளியில் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது…

ரஹீமா வெளியைக் கதவைத் திறந்து பார்த்தாள்..!

உள்ள வாங்கண்ண..!

ஏங்க..” அண்ணன் வர்ராப்ல..!

வாங்க சம்சு..!

“என்ன மச்சான் நல்லா இருக்கிங்களா”..! சொல்லிக்கொண்டே தான் துபாயிலிருந்து கொண்டு வந்த பொருட்களைக் குழந்தைகளிடம் கொடுத்து விட்டு வீட்டின் வெடித்த தரையையும் சூரியக் கதிரின் ஒளி பாய்ச்சும் கூறையையும் சுற்றிப் பார்த்தான். அவன் பார்வையை கவனித்த ரஹீமா அண்ண இரிங்க டீ” எடுத்துட்டு வரேன் என அடுப்படி பக்கம் கிளம்பினாள்.

தான் இன்று ஒரு முடிவோடு வந்திருப்பதைப் போல உரையாடலை துவங்கினான் சம்சுதீன்..

“என்ன மச்சான் இப்படியை போயிட்டு இருந்தா புள்ளைங்க எதிர்காலம் என்னா ஆவரது..?

ஐந்து வருசமா நானும் பாக்கிறேன் கட்டுரை எழுதுறேன் புத்தகம் எழுதுறேன்னு நாளு ஓடிகிட்ட இருக்கு..!

இல்ல சம்சு இந்த புத்தகம் மட்டும் வெளியை வந்திச்சின்னா..!

ஒரு பெரிய மாற்றம் வரும்..! அதற்கு நாம ஒவ்வொருத்தரும் தியாகத்துக்குத் தயாரா இருக்கனும்..!

அரசியல், சமுதாயம் முன்னேற்றம்ங்றது நாளஞ்சி தலைவர்களாலமட்டும் முடியாது நாம ஒவ்வொருத்தரும் இருக்கிற எடத்திலேர்ந்து பார்க்கிற அந்தந்த வேலையிலேந்து அமைப்பாய் திறள முடியும்ங்றத பத்திதான் இந்த ஆயிரம் பக்கத்துடைய என்னுடைய புத்தகம் ஐந்து வருட உழைப்பு..! சற்று உணர்ச்சி வசத்தோடு ஹமீது பேசி முடித்தான்.,!

சும்மா கூறுகெட்ட தனமா பேசாதிங்க மச்சான் எனக்கும் கொஞ்ச சமுதாயத்தைப் பத்தி தெறியும்,.! போயி முகநூல்ல திறந்து பாருங்க..! நாளு வரிக்க மேல எவனும் படிக்க அங்க தயாராயில்லை நீங்க பாட்டுக்கு ஆயிரம் பக்கம் எழுதி வச்சிட்டு புரட்சி வரும் புதுமை வரம்ங்கிரிங்க..!

மச்சான் ஒன்னு சொல்ற கேட்டுக்கங்க,., இங்கே எல்லாருக்கும் எல்லாமே தெறியும் ஆனா இங்கே எதுவுமே தெரியாத மாதிரி நமக்கு ஏன் வம்புன்னு தன் குடும்பத்த காப்பாத்த அவனவன் விலகிப்போய் நிக்கிறான்..!

அப்போ..! களத்திலேயே ஆயுசு முழுசும் இருக்காங்களே அவங்களுக்கு மட்டும் குடும்பம் குட்டி இல்லியா..!

அது அவங்கலா உருவாகுறாங்க..!

அப்போ நமக்கு நாளு பேறு போராட மட்டும் ஆளு வேனும்ல்ல..!

மச்சான் பேசுறதுக்கு வேனா ரசனையா இருக்கலாம்..!

காலத்துக்கு தகுந்தா மாதிரி மாறிக்கங்க..! என்று சற்று உரத்த குரலில் பேசத் தொடங்கினான்..

ஒங்களுக்கு ஒரு விசயம் சொல்றேன் தோ” நீங்க சொன்னிங்கல்ல ஆயுசு முழுக்க சமுதாயத்துக்காக போராடுராங்கன்னு இன்னைக்கி அவங்க பின்னால நின்னு ஜித்தாபாத் வாழ்கம்பான் நாளைக்கு அதே தலைவர்களுக்கு ஏதாவது ஒரு சிக்கல் வரும்போது எதையும் ஆராயம வார்த்தைகளால் முத்தல்ல தூக்கிப் போட்டு மிதிக்கிறது நம்ம பயலாதான் இருப்பான்…இங்கே அரசியல் எல்லாமே அறிவுப் பூர்வமா சிந்திக்காத உணர்ச்சிப் பூர்வமா கட்டப்பட்டிருக்கு. இங்க ஒருத்தன் இன்னொருத்தர குறை சொல்லி தான் தப்பிச்சிக்கிறான், இங்க நம்ம வறுமையை போக்க எந்த அரசாங்கமும், சமுதாயமும் வராது நாம தான் எங்கேயாவது ஓடி பொளச்சிக்கணும், இதெல்லாம் மாறாத இங்கே ஒன்னும் மாற்றம் வந்துடாது மச்சான்..!

“அப்போ அத செய்றதுக்கு வானத்துலேன்னு யாராவது குதிப்பாங்கலா..! “அது நம்ம எல்லோரோட கடமைதான “..!

மச்சான் இந்த விதண்டாவாதம் வேனாம் ஒரே முடிவா சொல்றேன், நாளைக்கு அக்காட்ட உங்க பாஸ்போர்ட் காப்பிய கொடுத்து விடுங்க நான் விசிட் போட்டு கையோடு உங்கள கொண்டு போய் வேலையில சேர்த்து விடுறேன் நீங்க சும்மா அரசியலு எழுத்து புத்தகன்னிங்கன்னா அக்காவையும் குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்பிடுங்க. கொஞ்சம் வேகமாகப் பேசி முடிக்க அந்த இடமே புயல் அடித்து ஓய்ந்த உணர்ச்சி கொந்தளிப்பிலிருந்தது.. நிலைமையை உள்ளிருந்து உணர்ந்த ஹமீதின் மனைவி வேகமாக வந்து அண்ணன் கையில் டீ யை வைத்தாள்..

அண்ண..! ஆறிடும் டீ குடின்ன…

“நாளைக்கு நான் பாஸ்போர்ட் காப்பிய எடுத்துட்டு வீட்டுக்கு வரேன்னே” என்று ஹமீதின் அனுமதிக்கு காத்திராமலே சொல்லி முடித்தால்..?

இதோ..! இன்று இரண்டு வாரங்கள் கழிந்த ஒரு வெள்ளிக்கிழமை நாளின் மாலைப்பொழுது ஹமீதின் வீட்டு வாசலில் சம்சு காரில் உட்கார்ந்து இருக்கிறான் துபாய் செல்ல.

ஹமீதும் லக்கேஜுடன் தயாராகி விட்டான் குழந்தைகளைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சென்றவனின் கண்களிலிருந்து நீர் கொட்ட ஆரம்பித்தது. எல்லோருக்கும் சொல்லிவிட்டுப் போய் காரில் ஏறி உட்கார்ந்தான், என்ன நினைத்தானோ திடீரென்று

“சமசு ஓரே ஒரு நிமிசம் இரு “

என இறங்கி வீட்டின் உள்ளே சென்றவன் அலமாரியைத் துறந்தான் தான் எழுதிய புத்தகத்தை மேல் அட்டையைத் தடவிப் பார்த்தான் அட்டையில் “மில்லத்” எனப் பேனாவால் தனது கனவு புத்தகத்திற்கு பெயர் சூட்டிருந்தான் முதல் பக்கத்தைத் துறந்து “அன்புள்ள மகனுக்காக” என்று எழுதி உள்ளே வைத்து விட்டு வேகமாகச் சென்று காரில் வந்து உட்கார்ந்து கொண்டான்.

கார் சென்னை விமானநிலையம் நோக்கிப் பறந்தது..! வழியெங்கும் ஷாஹின் பாக்கில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள் “இந்தியா எங்கள் தேசம்” யார் எங்களை விரட்டமுடியும் என்று…

எழுத்தும் சிந்தனையும்
ரஹமத்துல்லா,
அபுதாபி,
rahamth.1977@gmail.com.

One thought on “விலைபோகாத எழுத்துக்கள்

  1. இந்தியா எங்கள் தேசம் யார் எங்களை விரட்ட முடியும்…
    கற்கும் காலத்தில் வின்னைப்பிளக்கலாம்,மண்ணை ஆளலாம்,இது என் தேசம் என்று ஒவ்வொறு இளைஞனும் நினைக்கின்றார்.ஆனால் அவனுடைய கனவுகள் தகர்க்கபடுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *